fbpx
Connect with us

வெளியீட்டு உரிமத்தில் சாதனை படைத்த விஜய்யின் “தெறி”

வெளியீட்டு உரிமத்தில் சாதனை படைத்த விஜய்யின் “தெறி”

theri-vijay-still

கலைப்புலி எஸ். தணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த தெறி படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் தெறி படத்தின் முன்பதிவு வரும் ஞாயிறு அன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் தெலுங்கில் போலீஸோடு என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸாகிறது.

தெறி படத்தை எந்த எந்த நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்ற விவரமும் என்ன விலைக்கு தெறி படத்தை வாங்கியுள்ளனர் என்ற விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் சுமார் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டிருப்பதாக தகவல் அடிபடுகிறது.

சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களை சத்யம் சினிமாஸ் வாங்கி இருக்கிறது. கோயம்புத்தூர் ஏரியாவை மோனிகா ஃபிலிம்ஸ் நிறுவனம் 8 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை 5.60 கோடிக்கு வாங்கி இருக்கிறார் பிகே நாராயணசாமி.

இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ் பட நிறுவனம் மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை 6.90 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 4.60 கோடிக்கு சேலம் ஏரியாவை 7ஜி சிவா வாங்கி இருப்பதாகவும், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவை 3. 25 கோடிக்கு மன்னன் ஃபிலிம்ஸ் வாங்கி இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.

டாக்டர் ஆல்பர்ட் என்பவர் 3.50 கோடி கொடுத்து தென் ஆற்காடு ஏரியாவையும், அலங்கார் தியேட்டர் தேவராஜ் என்பவர் 3.25 கோடி கொடுத்து வடஆற்காடு ஏரியாவையும் வாங்கி உள்ளனராம்.

சென்னை, செங்கல்பட்டு 15 கோடி என்று வைத்துக் கொண்டால் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டிருக்கிறது. 50 கோடிக்கு விற்கப்பட்ட தெறி 100 கோடிக்கு வசூல் செய்தால்தான், பப்ளிசிட்டி, தியேட்டர் வாடகை அல்லது பங்குத்தொகை போக படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top