theri-vijay-2இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை கைப்பற்ற பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் மிக அதிக தொகைக்கு வியாபாரமாகும் படமாக ‘தெறி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு ‘தெறி’ படத்தின் வெளிநாட்டு உரிமை விலை பேசப்பட்டு வருகிறது. விஜய் படங்களிலேயே இந்த படம்தான் மிக அதிக விலைக்கு வெளிநாட்டு உரிமை விற்பனையாகும் மிகப்பெரிய சாதனையை ‘தெறி’ படம் நிகழ்த்தும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மற்றும் விஜய் மகள் திவ்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.