Connect with us

Cinemapettai

விஜய்யின் தளபதி65 படத்தின் இயக்குனர் இவரா? சிபாரிசு செய்த அனிருத்

vijay65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் தளபதி65 படத்தின் இயக்குனர் இவரா? சிபாரிசு செய்த அனிருத்

தளபதி65 படத்திலிருந்து முருகதாஸ் விலகிய நிலையில் அடுத்தது யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது.

விஜய்யும் பல இயக்குனர்களை அழைத்து தொடர்ந்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் யாருமே அவரை இம்ப்ரெஸ் செய்யவில்லையாம்.

அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஏற்கனவே படம் செய்த லோகேஷ் கனகராஜ், விஜய் எதிர்பார்த்த வெற்றிமாறன் என அனைவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி விட்டனர்.

இந்நிலையில் திடீரென மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் ஒரு இளம் இயக்குனர் ஒருவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளாராம்.

அவர் வேறு யாரும் இல்லை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தையும் இயக்கி உள்ள நெல்சன் திலீப்குமார் தானாம்.

கிட்டத்தட்ட தளபதி65 படத்தை இயக்கப் போவது இவர் தான் என்கிறார்கள் சினிமா வாசிகள். விஜய்யும் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் படம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறாராம்.

இருந்தாலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளிவந்து விஜய்யை இம்பிரஸ் செய்தால் தான் எனக்கு வாய்ப்பு என்கிறார்கள்.

nelson-anirudh

nelson-anirudh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top