Connect with us

Cinemapettai

விஜய்யின் தலைவா இரண்டாம் பாகம்.! இதோ மாஸ் தகவல்

thalaiva-2-nd-part

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் தலைவா இரண்டாம் பாகம்.! இதோ மாஸ் தகவல்

இயக்குநர் ஏ எல் விஜய் அஜித்தின் கிரீடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தாண்டவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது, இந்த நிலையில் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது, ஆனால் வசூல்ரீதியாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூல் ஆகவில்லை.

தற்போது ஏ எல் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி திரைப்படத்தை இயக்க இருக்கிறார், அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியில் கரு படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்.

ஏ எல் விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் தலைவா இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும், அதுதான் என்னுடைய ஐடியா எனக் கூறியுள்ளார், அப்போது விரைவில் தலைவா இரண்டாம் பாகத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top