Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆரம்பிச்ச அன்னக்கே ஆப்பு வச்ச தளபதி.. சில்வண்டு சிக்கும் சிறுத்த புலி சிக்காது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ரசிகர் கூட்டம் அதிகம்.
இதனால் முதல் ரசிகனாக விஜய் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கிய அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதனை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்று மாற்றி அமைத்தார்.
இந்த நிலையில் திடீரென விஜய் மக்கள் இயக்கத்தை ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருப்பதாக எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருப்பது நடிகர் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது தனது நடிப்பின் திறமையை கொண்டு, விஜய் தற்போது தமிழகத்தில் பெற்றுள்ள புகழை வைத்து தேர்தலில் ஆதரவு தருவதாக கூறி அரசியல் கட்சியினரோடு கூட்டணி பேரம் பேசும் வகையில் இந்த கட்சி தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இவ்வாறிருக்க இந்த கட்சி ஆரம்பித்த அன்றே விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டு அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு ஆப்பு வைத்து, அப்பாவின் ஆசைக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார்.
அந்த அறிக்கையில் விஜய், ‘எனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக தொலைக்காட்சியின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை. எனவே என்னுடைய ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் இணைந்து கொள்ளவோ பணியாற்றவோ வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு விஜய், எஸ் ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பித்த அன்றே அந்தக் கட்சிக்கு எண்டு கார்டு போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், ‘சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது’ என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

vijay-chandrasekar-cinemapettai
