ஒவ்வொரு நடிகர்களுக்கு பல ஹிட் படங்கள் இருக்கும். அதில் ஒரு சில படங்களின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டிருப்பர்.

அப்படி விக்ரம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக விக்ரமே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பு துருவநட்சத்திரம், விஜய் சந்தர் ஆகியவற்றிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இப்படத்தில் நாயகியாக திரிஷா போன்ற பல நாயகிகளின் பெயர்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தான் விக்ரமின் சாமி 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.