விஜய்,சூர்யா மற்றும் விக்ரமின் சாமி-2 ஒளிப்பதிவாளர் மரணம்.!அதிர்ச்சியில் திரையுலகம்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

விஜய்,சூர்யா மற்றும் விக்ரமின் சாமி-2 ஒளிப்பதிவாளர் மரணம்.!அதிர்ச்சியில் திரையுலகம்.!

News | செய்திகள்

விஜய்,சூர்யா மற்றும் விக்ரமின் சாமி-2 ஒளிப்பதிவாளர் மரணம்.!அதிர்ச்சியில் திரையுலகம்.!

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன்(53). இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர். சென்னையில் வசித்து வந்த ப்ரியன் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார்.

அவரின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சாமி, சிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுள்ளார்.

ப்ரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். தன் சித்தப்பா மூலம் நடிகர் பாலாஜியின் அறிமுகம் கிடைக்க அவர் வழியாக பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ‘மூன்றாம் பிறை’, ‘சந்தியராகம்’, ‘யாத்ரா’, ‘நீங்கள் கேட்டவை’ என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

priyan

ஒளிப்பதிவாளராக ‘தெனாலி’யில் கமல் தொடங்கி ‘வரலாறு’ அஜித், ‘வேலாயுதம்’ விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களுடன் பணிபுரிந்திருக்கிறார்.

‘தொட்டாசிணுங்கி’, ‘பொற்காலம்’, ‘தேசியகீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘தெனாலி’, ‘ஸ்டார்’, ‘மஜ்னு’, ‘தமிழ்’, ‘பாலா’, ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’, ‘உதயா’, ‘ஐயா’, ‘ஆறு’, ‘வல்லவன்’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘சேவல்’, ‘தோரணை’, ‘சிங்கம்’, ‘வேலாயுதம்’, ‘சிங்கம் 2’, ‘பூஜை’, ‘சிங்கம் 3’ என ப்ரியன் ஒளிப்பதிவு செய்த படங்களின் பட்டியல் பெரிது.

priyan

ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவரே. ‘வேங்கை’ படத்தைத் தவிர ஹரியின் எல்லா படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது அவர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாமி 2 படத்தில் வேலை பார்த்து வந்தார். கடுமையான உழைப்பாளியான ப்ரியன் திரையுலக பிரபலங்களின் மனதை வென்றவர்.

இந்நிலையில் ப்ரியன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதற்குள் சென்றுவிட்டீர்களே என்று பிரபலங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

priyan

ஒளிப்பதிவாளர் ப்ரியன் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இன்று விக்ரம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”ப்ரியன் மறைவு குறித்த செய்தியை திடீரென்று கேள்விப்பட்டதும் என் துயரத்தை வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

vikram-saamy

நான் சந்தித்த இனிமையான மனிதர்களில் ப்ரியனும் ஒருவர். அவர் ஒரு மென்மையான மனிதர். அவரது இறப்பு ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு. ப்ரியனின் ஆன்மா சாந்தியடையட்டும்.

பாலா இயக்கத்தில் துருவ் நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் டைட்டில் இன்று அறிவிப்பதாக இருந்தது. அதை நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி” என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top