Connect with us

Cinemapettai

மூன்றாவது முறையாக மோதப்போகும் விஜய்-சூர்யா ?

Cinema News | சினிமா செய்திகள்

மூன்றாவது முறையாக மோதப்போகும் விஜய்-சூர்யா ?

theri-24-movieவிஜய் மற்றும் சூர்யாவின் படங்கள் ஏற்கனவே இருமுறை ஒரே நாளில் ரிலீஸாகியுள்ள நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக இரு நடிகர்களின் படங்களும் ரிலீஸாகும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் சூர்யா நடித்த ‘வேல்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 2007ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகியது. அதேபோல் கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ மற்றும் சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’ ரிலீஸ் ஆகியது. இதேபோல் தற்போது வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் சூர்யா நடித்த ’24’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘தெறி’ படம் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில் தற்போது வெளிவ்நது கொண்டிருக்கும் செய்திகளின்படி அதே நாளில் ’24’ படமும் ரிலீஸாகும் என தெரிகிறது. மூன்றாவது முறையாக மோதும் விஜய்-சூர்யாவின் படங்களில் இரண்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top