Connect with us

Cinemapettai

vijay-surya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

8 வருஷத்துக்கு முன்னாடி தோத்துட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்.. மீண்டும் மோதலில் விஜய், சூர்யா

நடிகர் விஜய், சூர்யா இருவருமே ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நேருக்கு நேர் படம் வரும் பொழுது சூர்யாவிற்கு ரசிகர்கள் சேர்ந்தனர். அப்பொழுது விஜய், சூர்யா இருவரும் வளர்ந்து வரும் நடிகர்கள். அதன்பின் சில படங்களில் மோதிக்கொண்டனர் வெற்றி தோல்வியை பகிர்ந்து கொண்டனர்.

தற்பொழுது மீண்டும் விஜய், சூர்யா மோத உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது வெளிவந்த பிகில் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நிலைமை கேள்விக்குறிதான்.

மேலும் சூர்யாவிற்கு வரிசையாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே அமைந்தன. சரியான இயக்குனர்கள் கிடைக்காததால் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது இறுதிசுற்று பட இயக்குனர் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் சூரரை போற்று.

சூரரை போற்று படத்தின் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளிவர இருந்தது.ஆனால் சில பல காரணங்களால் படம் தள்ளிப் போடப்பட்டது. அதுவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படம் வெளிவரப் போகிறது என்பது கூடுதல் செய்தி. விஜய் சூர்யா நேருக்கு நேராக மோதிக் கொண்ட கடைசி படம் வேலாயுதம், ஏழாம் அறிவு. இதில் ஏழாம் அறிவு மிகப்பெரிய தோல்வி பெற்றது. வேலாயுதம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தற்பொழுது 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி தியேட்டரில் நடக்கும் ஆரவாரத்தை பொருத்து தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top