விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டு வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படக்குழுவினருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது, ‘பைரவா’ வெற்றிக்கு வித்திட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் விஜய் தனது சொந்த செலவில் தங்க செயின் மற்றும் மோதிரம் பரிசளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.