Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீரா மிதுனுக்கு அஜித் ரசிகர்கள் சப்போர்ட் செய்கிறார்களா? விஜய், சூர்யா ரசிகர்கள் அதிருப்தி
கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன், தளபதி விஜய் மட்டும் சூர்யா ஆகியோரை தமிழ் சினிமாவின் மாபியா குடும்பங்கள் என வர்ணித்து வருகிறார். இவர்களால்தான் தன்னுடைய சினிமா வாழ்க்கை பறிபோனதாக தெரிவிக்கிறார்.
சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதாவையும் சூர்யா மனைவியும் நடிகையுமான ஜோதிகாவையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசிய வீடியோ அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
தற்போது மீரா மிதுனை கண்டாலே ரசிகர்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது கமெண்ட்களில் காது கருகும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி வருகின்றனர்.
ஆனால் இந்த பிரச்சனையின் விளைவு தெரியாத சில அஜித் ரசிகர்கள் விஜய்யை அசிங்கப்படுத்தனும் என்ற பெயரில் மீராமிதுனுக்கு சப்போர்ட் செய்வது மாதிரியான பிம்பம் ஏற்படுகிறது.
அதை சில ரசிகர்களின் கமெண்ட்களில் பார்க்க முடிகிறது. இது மொத்தமாக நல்லதல்ல. இதே நடிகை நாளைக்கு அஜித்தையும் தவறாக பேசுவதற்கு தயங்க மாட்டார் என்பதை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும்பாலான அஜித் ரசிகர்கள் மீராமிதுனை திட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். யாரோ வேண்டுமென்றே மீராமிதுனுக்கு பின்னாடி இருந்து சொல்லிக் கொடுப்பது போல தொடர்ந்து டார்கெட் செய்து பேசி வருகிறார்.
ஆகையால் ரசிகர் சண்டைகளை மறந்து விட்டு இந்த மாதிரி விஷக் கிருமிகளை வளர விடாமல் தடுப்பதே அவர்களது நடிகர்களின் மேல் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை.
மீரா மிதுனை தவறாக பேசப்போய் விஜய் மற்றும் சூர்யாவை வேறு எந்த பிரச்சனையிலும் ரசிகர்கள் சிக்க வைத்து விடக்கூடாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
