Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மறைமுகமாக இந்தக் கட்சிக்கு சப்போர்ட் செய்கிறாரா? ஆதரவு கொடுக்கும் அமைச்சர்
தற்போது தமிழகத்தில் இருக்கும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவரான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இறந்த பிறகு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாத முதல் தேர்தலை சந்திக்க உள்ளது இரண்டு கட்சிகளும்.
இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது கட்சியாக மாறும் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் இடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாண்டியராஜன் கூறியதாவது, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவுக்கு ஆதரவு தந்தவர் விஜய் எனவும், அவரது மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால் எங்களுக்கு சாதகம் தான் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சர்க்கார் படத்தின் பிரச்சனைக்கு பிறகு விஜய் மற்றும் அதிமுக ராசியாக சென்று விட்டதாக தெரிகிறது.

vijay-cinemapettai
