தளபதி விஜய் செய்ய சொன்ன விஷயத்தை அவர் ரசிகர்களால் காமெடி நடிகர் சதீஷ் செய்ய தயங்கி ஒரு சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கிரேஸி மோகன் நாடக குழுவில் எட்டு ஆண்டுகளாக வசனகர்த்தாவாக பணியாற்றியவர் சதீஷ். அவருக்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது பொய் சொல்ல போறோம் படத்தில் துணை வசனகர்த்தாவாக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்தார். தொடர்ந்து, அவர் இயக்கத்தில் உருவான மதராசபட்டினத்தில் சதீஷ் சிறு வேடத்தில் படத்தில் நடித்திருந்தார். இவரை ஒரு காமெடி நடிகராக அங்கீகரித்தது சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர் நீச்சல் படம் தான். அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் எல்லா படத்திலும் இவருக்கும் ஒரு இடம் உருவாகியது. தொடர்ந்து, பல வெற்றி படங்களிலும் நடித்து வருகிறார். விஜயின் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் அவருடன் செம காமெடி ரோலை சதீஷ் நடித்திருந்தார். இதில் விஜயை கலாய்க்கவும் தவறவில்லை.

இக்காட்சிகள் குறித்த சுவாரசிய தகவலை தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சதீஷ். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் விஜயை சாதாரணமாக கலாய்த்து இருக்கிறார். அது நன்றாக அமைந்ததால், படக்குழு அதை காட்சியாக மாற்ற முடிவு செய்திருக்கிறது. காட்சி சிறப்பாக வந்ததாம். ஆனால், சதீஷிற்கு ஒரு வித பயம் தொற்றிக்கொண்டதாம். ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்று இதை விஜயிடமே சொல்லி இருக்கிறார். அதற்கு சிரித்து கொண்ட விஜய் என் ரசிகர்கள் நீ சொன்னால் ஒன்றும் செய்ய மாட்டார்கள் எனக் கூறி சென்றாராம்.