மலை போல் நிற்கும் விஜய்.. எல்லா தயாரிப்பாளர்களையும் காலி பண்ணும் அட்லி

ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்த தளபதி விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படத்தை கொடுத்த அட்லி, அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இப்போது விஜய் அட்லிக்கு இப்போதும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அட்லி கிட்டத்தட்ட நான்கு வருடமாக மும்பையில் செட்டிலாகி ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்பொழுது விஜய்யை வைத்து பிரம்மாண்ட படம் எடுக்கவும் திட்டமிட்டு வருகிறார். 400 கோடி செலவில் படம் எடுக்கப் போகிறாராம். அட்லிக்கு கொடுக்கப்படும் சம்பளம் 50 கோடி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: ஷங்கர் போல் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது கண்ணியமும் வேண்டும்.. அட்லியின் சிறுபிள்ளை ஆட்டிட்யூட்

ஏற்கனவே இவர் தெறி பட சமயத்தில் பல தயாரிப்பாளர்களை ஓட விட்டிருக்கிறார். ஸ்டோரி டிஸ்கஷனுகாக ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூம் தான் போடுவாராம். அங்கேதான் ஸ்டோரி டிஸ்கஷன் நடக்கும். இப்படி இவர் சொன்ன பட்ஜெட் தாங்காமல் இவரை விட்டு ஓடியவர்கள் பல தயாரிப்பாளர்கள்.

அப்படித்தான் தெறி பட தயாரிக்கும் வாய்ப்பு கலைப்புலி தாணுவிடம் வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் நாங்கள் அட்லீக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகை மற்றும் இதுவரை ஆன செலவையும் சேர்த்து ஸ்டோரி டிஸ்கஷன் செலவையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.

Also Read: வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

ஸ்டோரி டிஸ்கஷன் 2-3 லட்சம் செலவாகியிருக்கும் என காத்திருந்த கலைப்புலி தாணுவிற்கு பேரதிர்ச்சி. மொத்த பில்-லையும் அட்லி கலைப்புலி தாணுவிடம் கொடுத்திருக்கிறார். அது 80 லட்ச ரூபாயாம். இவ்வளவு அலப்பறை செய்த அட்லி, தெறி படத்தை 75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கினார்.

அதன்பின் எதிர்பார்த்த அளவு படத்திற்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் 150 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்றதன் மூலம் கலைப்புலி தாணு பெருமூச்சு விட்டார். இப்போது மீண்டும் விஜயின் படத்தில் கமிட் ஆகி இருக்கும் அட்லி இந்த படத்திற்கு என்னென்னவெல்லாம் அலப்பறை செய்யப் போகிறாரோ என்று தயாரிப்பாளர்கள் கதி கலங்கி நிற்கின்றனர்.

Also Read: பாலிவுட்டிலும் பெயரை கெடுத்து கொள்ளும் அட்லி.. முன்கூட்டியே விழித்துக் கொண்ட ஷாருக்கான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்