அசிங்கப்படுத்தப்பட்ட தளபதி விஜய்.. அதிர்ந்து போன திரையுலகம்

தளபதி விஜய்யை உரிமையாக எங்கள் அண்ணன் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதையும் தாண்டி தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மற்றும் மாஸ் ஹீரோ என்ற நிலையில் விஜய் இருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாவை நேசிக்கும் அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அளவிற்கு தளபதி விஜய் ஒரு சினிமா விழாவில் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ந்த சினிமா நூற்றாண்டு விழாவில் அழையா விருந்தாளி போல சென்று நடிகர் விஜய் அசிங்கப்பட்ட நிகழ்வுதான் அது. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசால் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிகழ்வு தான் இந்திய சினிமா நூற்றாண்டு விழா.

இதில் இந்திய சினிமாவின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் ரஜினி, கமல், அஜித் , சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு முன் இருக்கையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வரிசையில் விஜய்யின் பெயர் எங்குமே இடம்பெறவில்லை. அதனால் அவரை பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அமர வைத்தனர்.

வேண்டுமென்றே செய்தது போல அனைத்து நடிகர்களும் முன் இருக்கையில் இருக்கும் போது விஜய் மட்டும் தனியாக பின் இருக்கையில் அமர வைத்து அவமானப்படுத்தினர். உடனே அவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக நடிகை சிம்ரன், இயக்குனர் மனோ பாலா, நடிகர் விக்ரம் போன்றவர்கள் அவருக்கு அருகில் வந்து அமர்ந்தனர்.

எதற்க்காக அவரை அழைக்க வேண்டும். ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்தனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜய்க்கும் இருந்த மோதல் தான் இதற்கு காரணம் என்று பேசப்பட்டது.

பெரிய பெரிய அரசியல் தலைவர்களே ஒரு கை பார்ப்பவர் ஜெயலலிதா. அப்படி இருக்கையில் விஜய்யை விட்டு வைப்பாரா என்ன..? அதனால்
தான் அவரிடம் தன்னுடைய சித்து விளையாட்டை விளையாடி இருக்கிறார் ஜெயலலிதா.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்