fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் மகனுக்கு வந்த அடுத்த சிக்கல்.. சங்கீதாவின் ஐடியா.. மனைவி சொல்லே மந்திரம் என தலை அசைத்த தளபதி

vijay-wife-sangeetha

India | இந்தியா

விஜய் மகனுக்கு வந்த அடுத்த சிக்கல்.. சங்கீதாவின் ஐடியா.. மனைவி சொல்லே மந்திரம் என தலை அசைத்த தளபதி

இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கனடாவில் மாட்டிக்கொண்டு உள்ளதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது.

ஊருக்கே புள்ளி வைக்கும் விஜய்க்கு ஒரு கோலம் போட தெரியாதா? தற்போது வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா, இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். ஏனென்றால் அந்த திட்டத்தில் இருக்கும் பாதக அம்சங்களை பட்டியலிட்டு விஜய்யை வேண்டாமென சொல்ல வைத்துவிட்டாராம்.

சங்கீதா மறுத்ததற்கு மற்றுமொரு காரணம் உள்ளதாம், அதாவது கனடாவில் தனது குடும்பத்தின் பாதுகாப்பில் தான் சஞ்சய் இருக்கிறார். ஏனென்றால் சங்கீதாவின் தந்தையின் அனைத்து தொழில்களும் கனடாவில் தான் நடைபெற்று வருகிறதாம்.

அதனால் சஞ்சய் பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பிக்கை அவருக்கு அதிகமாக  உண்டாம். விஜய் மகன் சஞ்சய், விஜய் சேதுபதியின் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவலாக பேசப்பட்டது, விரைவில் அந்த படம் எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் அப்பாவைப்போல் மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும், கண்டிப்பாக ஒரு சிறந்த நடிகராக வெளி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top