Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒவ்வொரு விஷயத்திலும் விஜய்யை பாலோ பண்ணும் மகன் சஞ்சய்.. அதுக்குன்னு இதுலயுமா?

தற்போது ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் மகன்களும் அடுத்தடுத்து வாரிசு நடிகர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார்.
அடுத்ததாக அனைவரும் பேசிக் கொண்டிருப்பது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்பவரைப் பற்றிதான். இவருக்கும் ஆரம்பத்திலிருந்தே சினிமாவின் மீது மோகம் இருப்பது தெரிந்த ஒன்றுதான்.
சினிமா டைரக்சன் பற்றி பிரத்தியேகமாக கனடா நாட்டில் படித்து வந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தற்போது படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் அடுத்ததாக என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கிடையில் தன்னுடைய நண்பர்களுடன் அவர் ஊர்சுற்றும் வீடியோக்கள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. மேலும் ஜேசன் சஞ்சய் அச்சு அசல் விஜய் போலவே சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் சினிமாவாசிகள்.
மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய் கொஞ்சம் வித்தியாசமானவர். சமூக வலைதளங்களில் யாரையுமே பாலோ செய்ய மாட்டார். அதேபோல் ஜேசன் சஞ்சயின் டிவிட்டர் பக்கத்தில் ஒரே ஒருவரை மட்டும் பாலோ செய்து வருகிறார். அந்த ஒருவரும் அவரது தந்தை தளபதி விஜய் தான்.
அதேபோல அவரது நடை உடை பாவனை அனைத்துமே பார்ப்பதற்கு அச்சு அசல் தளபதி விஜய் போலவே உள்ளது. இதனால் கண்டிப்பாக ஹீரோவாக களம் இறங்கினால் பெரிய அளவில் வரவேற்பை பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

vijay-son-sanjay-cinemapettai
