விஜய் படங்கள் வெளியாகும் போதும், சிம்புவின் பீப் பாடலின் போதும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளும் லெட்டர் பேடு கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் என்று விஜய், மற்றும் சிம்பு ரசிகர்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணமே இல்லாமல் விஜய் படங்களை எதிர்த்து போராடியவர்கள் இப்போது எங்கே சென்றுவிட்டார்கள் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளதற்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பதில் இல்லை