fbpx
Connect with us

பிரச்சனையா பண்றீங்க.. இந்த நடிகர் வீட்டில்தான் ஷூட்டிங்? விஜய் 62 அதிரடி

News | செய்திகள்

பிரச்சனையா பண்றீங்க.. இந்த நடிகர் வீட்டில்தான் ஷூட்டிங்? விஜய் 62 அதிரடி

நடிகர் விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வருவது புதிதல்ல, மறந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே தலைவா படத்திற்கு பல பிரச்சனை வந்தது அதிலிருந்து தொடங்கி இப்ப வரைக்கும் அனைத்து விஜய் படத்திற்கும் பிரச்சனைதான். ஆனால் அதெல்லாம் சமாளித்து படத்தை வெளியிட்டு நல்லா கல்லா கட்டிவிடுவார் தயாரிப்பாளர். இந்த பிரச்சனைகளையே மூலதனமாக போட்டு படத்தை வெளியிட்டு ஹிட் கொடுத்து விடுகிறார்கள். இது இப்ப இருக்கிற நம்ம சினிமாவுக்கு புது பாலிசி. இப்ப பிரச்சனை இல்லாமல் படத்தை ரிலீஸ் பண்றதுகுதான் கல்லா கட்டுமோ என தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ஆம் படம் சுமாரா இருந்தா கூட இந்த நெட்டிசன்களால் மற்றும் ஆன்லைன் விமர்சகர்களால் படத்தை மொக்க படம் அளவுக்கு பில்ட் அப் குடுத்து விடுகிறார்கள்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய பிரம்மாண்ட படத்திற்கு இப்பவே பல பிரச்சனை வர ஆரம்பித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் விஜய் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருகிறது. போ போ நாங்கலாம் பல பிரச்சனை பார்த்தவங்க என படபிடிப்பு குழுவும் கண்டுகொள்ளவே இல்லை. இருந்தாலும் பிரச்சனைகளை சமாளிச்சிதான் ஆகணும் அதுக்கு ஒரு மாஸ்டர் பிளான் போட்டுருகிறது விஜய் படக்குழு.

மூன்று நாட்கள் மட்டும்தான் படபிடிப்பு நடக்கும் என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்தாலும் அதை சிலர் ஏற்று கொள்ள மறுத்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வந்த ஷூட்டிங் அங்கு கூட்டம் நெரிசல் காரணமாக அடுத்து இடம் மாற உள்ளது. அந்த கூட்டத்திலும் ரசிகர்களுக்காக வெளியே வந்து கை அசைத்து உற்சாகம் செய்தார்.

தயாரிப்பாளர் சங்கமும் ஷூட்டிங் நடத்த விடுவதாக தெரியவில்லை. இவர்களும் விடுவதாக இல்லை. ஷூட்டிங் எங்கே எப்போ நடக்கும் என யாருக்கும் தெரியாதபடி நடத்திக்கொண்டு இருகின்றனர். இந்த நேரத்தில்தான் ஒரு முக்கிய பிரமுகர் வீட்டில் ஷூட்டிங் நடந்தால் யாரும் கேட்கவும் முடியாது அதை தடுக்கவும் முடியாது என மறைந்த நடிகர் சிவாஜி வீட்டில் ஷூட்டிங் நடக்க பிரபு ஓகே சொல்லி இருக்கிறார். ஏற்கனவே பல முக்கிய படகாட்சிகள் முடிந்துள்ளன. இப்பொழுது இன்னும் கொஞ்சம் சீன்ஸ் முடிந்துள்ளது. இதற்கு முன்பே விஜயின் பைரவா படபிடிப்பு நடந்துள்ளது. இப்பொழுது முருகதாசும் அதையே பிளான் பண்ணி எடுத்து கொண்டிருக்கிறார்.

எவ்வளோ பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருகிறது அதை முடித்து வைக்க ஒருவரும் முன் வரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு புது படமும் வெளிவருவதா இல்லை? ஆமா நம்ம அரசியலில் ஒரு வெற்றிடம் போல நம்ம சினிமாவிலும் ஒரு வெற்றிடம்தான். உண்மையான ஹீரோ அளவுக்கு வாக்குறுதி குடுத்த விஷால் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஒன்னும் புரியல? இவர் பிரச்சனைலாம் முடிக்காம நேராக ஆர் கே நகர் தேர்தலுக்கு போய்விட்டார். நம்ம மக்களோட நிலைமை அவ்வளோ மோசமா இருக்கு. என்ன பண்றது எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top