Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் ஷங்கர்- மீம்ஸ் போட்டு கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

விஜய் ஷங்கர் மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். இந்திய ஏ அணி, ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. உலகக்கோப்பைக்கு தேர்வான இந்திய அணியில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார். மூன்று போட்டிகளுக்கு பின் காயம் காரணமாக டீம்மில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு இவர் தொடர்ந்து காயம், பார்ம் அவுட் என இந்திய டீம்மில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சொன்ன சில விஷயங்கள் பலரின் கிண்டல் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

“ஐந்தாம் இடத்தில ஆட வாய்ப்பு கிடைத்தால் கூட போதும், அதற்கு ஏற்ற மாதிரி தயாராகுவேன். ஐபிஎல் மற்றும் தமிழகத்துக்கு ஆடும் பொழுது கூட வெவ்வேறு பொஷிஷன்களில் தான் ஆடியுள்ளேன். 6 ஆம் இடத்தில ஆடும் சமயத்தில் அதிக ஓவர்கள் கிடைக்காது, எனவே 30 – 40 ரன் எடுக்கும் வீரர் என்ற பிம்பத்தில் உள்ளேன், எனவே இந்திய டீம்மில் இடம் பிடிக்க போராடுவது கடினமாகிறது.

அதிக ரன் எடுக்க வேண்டுமெனில், கிரீஸில் அதிக நேரம் இருக்கவேண்டும். ஒபெநிங் ஸ்லாட் வேண்டும் என நான் கேட்கவில்லை, நான்கு அல்லது ஐந்தாம் இடம் இறங்கினாலும் ஓகே தான். அப்பொழுது ரன் எடுக்கவில்லை எனில் டீமில் இருந்து என்னை நீக்கலாம் . இதனால் தான் கடந்த இரண்டு வருடமாக நான் தடுமாறி வருகிறேன்.

நான் ஆல் ரௌண்டராக இருப்பினும், பேட்டிங் தான் இரண்டில் சிறந்தது. ஆல் ரௌண்டார் என்பதனால் 6 ஆம் இடத்தில தான் ஆடவேண்டும் என்பது கிடையாது. நானும் ஜாக்ஸ் கல்லிஸ் மற்றும் ஷேன் வாட்சன் போல விளையாட முடியும், அவர்கள் ஒபெநிங் அல்லது நம்பர் 3 ஆடுவர். ஆல் ரௌண்டார் என்பதனால் 6 ஆம் இடத்தில தான் ஆடவேண்டும் என்பது கிடையாது. டாப் ஆர்டரில் ஆடி ரங்களும் குவித்து, விக்கெட்டும் வீழ்த்தும் பட்சத்தில் அது டீமுக்கு பலம் தானே ?” என தனது கருத்துக்களை சொன்னார்.

memes

இதற்கு தான் நெட்டிசன்கள் ஷங்கரை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். ரோல் மாடல், இன்ஸபிரேஷன் யார் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். விஜய் நான் வாட்சன் போல் ஆடுபவன் என கூறவில்லையே, கல்லிஸ், வாட்சன் போன்ற வீரராக ஆகமுடியும், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்று தான் கூறியுள்ளார்.

நமக்கு இதில் எதுவும் தவறாக தெரியவில்லை. உங்களின் பதிலை கமெண்டில் தட்டி விடுங்க.

Continue Reading
To Top