Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது தமிழக ஆல்- ரவுண்டர் விஜய் ஷங்கரின் தல அஜித் பற்றிய ட்வீட் !
விஜய் ஷங்கர்
மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். மேலும் தமிழக டி 20 அணியின் தலைவரும் இவரே. அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் அணியின் முக்கிய வீரர்.
இந்திய ஏ அணி, மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவரை டெஸ்ட் அணியில் சேர்த்தனர். எனினும் இவரது அறிமுகம் நடந்தது என்னவோ ஸ்ரீ லங்காவில் நடந்த டி 20 போட்டியான நிதாஸ் கோப்பையில் தான். என்ன தான் பேட்ஸ்மேனாக இருந்த போதிலும், இந்தியா டீம்மில் பௌலர் ரோல் தான் வழங்கப்பட்டது. லீக் போட்டிகளில் மேன் ஆப் தி மேட்ச் விருதும் பெற்றார். எனினும் பைனல் போட்டியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஓவரில் இவர் தடுமாறியது தான் பலரின் நினைவில் பதிந்துவிட்டது.
ஐபில்
ஐபில் போட்டிகளை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்துள்ளார். ஹைதராபாத் அணிக்காக ஒரு சில போட்டிகளில் நன்றாகவும் ஆடினார். இம்முறை டெல்லி அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. கம்பிரிடம் இருந்து ஷ்ரேயாசுக்கு தலைமை பொறுப்பு மாறியதும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனி ஆளாக சி எஸ் கேவுக்கு எதிரான போட்டோயிலும் கலக்கினார்.
இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் ” மிகவும் இளகிய மனதுடையவர், மற்றும் பல இளசுகளின் ரோல் மாடல் ஆக இருப்பவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் ” என்று டீவீட்டியுள்ளார்.
இந்த ஒற்றை ட்வீட் 9000 க்கு மேல் லைக்கும், 4000 துக்கும் மேல் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
