3D கண்ணாடி என கலாய்த்த ராயுடு.. பதிலுக்கு விஜய் ஷங்கர் என்ன சொல்கிறார் தெரியுமா.?

இந்திய டீம்மை பொறுத்தவரை உலகக்கோப்பை கூட தோணி தலைமையில் வென்று விட்டனர், ஆனால் கபில் தேவுக்கு பிறகு ஒரு பாஸ்ட் பௌலிங் ஆல் ரௌண்டர் கிடைத்தபாடில்லை. இர்பான் பதான் தொடங்கி ஹர்டிக் பாண்டியா , விஜய் ஷங்கர் அந்த இடத்தை பிடிப்பர் என எதிர்பார்த்த நேரத்தில் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.

உலக்கோப்பை டீமுக்கு தேர்வானார் விஜய் ஷங்கர் , தேர்வுக்குழுவை சேர்ந்தவர் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என முப்பரிமாணம் உள்ள வீரர் என விஜய் பற்றி கூறினார். அந்த நேரத்தி டீமில் தேர்வாகாத ராயுடு புதிய 3 டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன் உலகக்கோப்பை பார்க்க என பதிவிட்டார். இது அப்போதைய வைரல் சமாச்சாரம். அன்று தொடங்கி இன்று வரை விஜய் ஷங்கரை பலரும் 3 டி வீரர் என சொல்லி வருகின்றனர்.

இந்த நிகழ்வு பற்றி சமீபத்தில் ஷங்கர் பின்வருமாறு சொல்லியுள்ளார்…

Ambati Rayudu

“எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நெட்டிசன்கள் யாரோ உருவாக்க அந்த டேக் வைரலானது. உலகக்கோப்பையில் நான் மோசமாக ஆடவில்லை. ஐபிஎல்-லில் கூட எனது பேட்டிங் பொஷிஷன் மாறிய படியே உள்ளது. என்னை ராயடுவுடன் பலர் ஒப்பிடுகின்றனர். நாங்கள் இருவரும் ஆடும் பேட்டிங் வரிசை மற்றும் சூழல் முற்றிலும் வேறு. ஆனால் அதைப்பற்றி யோசிக்காமல் தாங்கள் சந்தோஷசமாக இருக்க சமூகவலைத்தளங்களில் இப்படி ஒப்பிட்டு பேசுகின்றனர்.

நானும் ராயுடுவும் சந்திக்கும் நேரத்தில் பேசிக்கொள்வோம், எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை. அவர் அந்த நேரத்தில் அதுபோல ட்வீட் செய்ய, அந்த கருத்து சூடு பிடித்தது. எனக்கு அவரிடம் எந்த வித மனக்கசப்பும் கிடையாது.” என பெருந்தன்மையாக சொல்லி முடித்தார் விஜய் ஷங்கர்.