Connect with us

Cinemapettai

காயம் காரணமாக உலகக்கோப்பை டீமில் இருந்து விஜய் ஷங்கர் வெளியே ! மாற்று வீரர் யார் தெரியுமா ? மிகப்பெரிய ஆச்சர்யம் …

vijay-shankar-world-cup-india-pakistan-match-2019

Sports | விளையாட்டு

காயம் காரணமாக உலகக்கோப்பை டீமில் இருந்து விஜய் ஷங்கர் வெளியே ! மாற்று வீரர் யார் தெரியுமா ? மிகப்பெரிய ஆச்சர்யம் …

தமிழகத்தின் விஜய் ஷங்கர் காயம் காரணமாக டீம்மில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்கு தேர்வான இந்திய அணியில் அம்பதி ராயுடு, மற்றும் ஸ்டார் பிளேயர் ஆன ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஆனால் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர்.

ராகுல் முதலில் மத்திய வரிசையில் ஆடினார் தவான் காயம் அடைய ஒபெநிங் பொசிஷன் மாறினார். முதலில் மாற்றுவீரர் அறிவிக்கவில்லை, பின்னர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கர் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் ஆடினார்.  இவரை அணியில் சேர்த்ததற்கு பலரும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றயை போட்டியில் நம்பர் 4ல் பண்ட் ஆடினார்.  விஜய் ஷங்கருக்கு காலில் அடி என்ன சொல்லியது பிசிசிஐ. அதனை பற்றி முழு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜூன் 20 பயற்சி யின் சமயத்தில் பும்ரா வீசிய பந்து விஜயின் இடது காலில் பட்டது. எனினும் பிட் என்பதால் தான் ஜூன் 22 மற்றும் 27 போட்டிகளில் ஆடினார். இந்நிலையில் அந்த நிகழ்வு கால் விரலில் பிராக்ச்சர் என தெரிவித்துள்ளனர்.

மாற்று வீரராக அஜின்க்யா ரஹானே,  ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, ப்ரித்வி ஷா அவர்களை சேர்க்காமல் கர்நாடகாவின் இளம் துவக்க ஆட்டக்காரர் “மாயங் அகர்வாலை” சேர்த்துள்ளனர். இந்த வார இறுதியில் இவர் டீமில் இணைவாராம். மத்திய வரிசையில் வீரர் எடுக்காமல் ராகுல் மற்றும் ரோஹித்துக்கு பேக் அப்பாக ஒபெநிங் பேட்ஸ்மேன் எடுத்துள்ளனர் தேர்வுக்குழு.

மாயங் அகர்வால் சென்ற டிசம்பரில் டெஸ்ட் பட்டியில் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகினார். இது வரை சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடியதில்லை. எனினும் லோக்கல் மற்றும் ஐபில், இந்தியா ஏ டூர்களில் அசத்தியுள்ளார்.

K XI P – MAYANK AGARWAL

சென்ற வருடம் ஏ டீமிற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இவர் நான்கு போட்டிகளில் 287 ரன்கள் குவித்தார் . சராசரி 71.75 மற்றும் ஸ்ட்ரிக் ரெட் 105.90.

விஜய் ஷங்கர் காயம் மற்றும் நீக்கம் நமக்கு மட்டுமல்ல கிரிக்கெட் வட்டரத்திலும் புரியாத புதிராகவே உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top