Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-shankar-world-cup-india-pakistan-match-2019

Sports | விளையாட்டு

முதல் உலக கோப்பை, முதல் பந்து, முதல் விக்கெட்.. கலக்கிய விஜய் சங்கர்

Vijay Shankar: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் உலக கோப்பை தொடரில் ஒரு சாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 5-வது ஓவரில் நான்காவது பந்து முடிவில் காயத்தால் வெளியேறினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை பவுலிங் போட அழைத்தனர்.

உலக கோப்பையில் முதல்முறையாக களமிறங்கிய விஜய் சங்கர் தன்னுடைய உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே தன்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம் உலக கோப்பை போட்டி வரலாற்றில் தனது முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும் பல பேர் வாய்ப்புக்காக காத்திருக்கும்  இக்கட்டானா சூழ்நிலையில் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் விஜய் ஷங்கர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top