fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியை சந்தித்த விஜய் ஷங்கர். 2100 ரி ட்வீட், 21000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே .

Photos | புகைப்படங்கள்

விஜய் சேதுபதியை சந்தித்த விஜய் ஷங்கர். 2100 ரி ட்வீட், 21000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே .

கிரிக்கெட்டில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி வரும் விஜய் ஷங்கர், நடிப்பில் கலக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்ததாக போட்டோ பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய் ஒரு புறம் தமிழகத்தில் பிரபலமாக இருக்க வேற சில சூப்பர் ஸ்பெஷல் விஜய்களும் இங்கு உண்டு.

விஜய் ஷங்கர்

மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். உள்ளூர் போட்டி, ரஞ்சி, இந்தியா ஏ என படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் கேப்டன் தொடங்கி ரசிகர்கள் வரை பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார். ஐபில் இல் சிறப்பாக சன் ரய்சர்ஸ் ஹைதெராபாத்துக்கு ஆடும் பட்சத்தில் உலக கோப்பைக்கான டீம்மில் இடம் பெற வாய்ப்புள்ளது.

Vijay Shankar

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

ஒருபுறம் சிந்துபாத் போன்ற மாஸ் கமெர்ஷியல் படம் மறுபுறம் அரவாணி ஷில்பாவாக நடிக்க ஸ்கோப் உள்ள சூப்பர் டீலக்ஸ் என வித்தியாசம் காட்டுபவர். இன்றைய தேதியில் மகா நடிகன் என்று அழைக்கப்படுபவர். எனினும் நடிகன் என்பதனை விட நல்ல மனிதன் என்றே நம்மில் பலர் இவரைப்பற்றியும் சொல்வதுண்டு. ஏற்கனவே மனிதருக்கு ரசிகர் வட்டம் பெரியது அதிலும் குறிப்பாக 96 படத்திற்கு பிறகு அது பன்மடங்கு அதிகமாகி விட்டது.

SUPER DELUXE

முன்பே கூட தினேஷ் கார்த்திக் தான் விஜய் சேதுபதியின் ரசிகன் என டீவீட்டிய விஷயம் நம்மில் பலருக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, பேன் பாய் தருணம் என விஜய் ஷங்கர் எந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இது  பல லைக்ஸ் குவித்து வருகின்றது.

Vijay (Sethupathi – Shankar )

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மாத இறுதியில் விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பை அணியில் இடமும், சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதிக்கு ஒரு தேசிய விருதும் கிடைக்க சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top