இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் “விஜய் சங்கர்” சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Vijay Shankar

இலங்கை அணி இந்தியாவில்  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. இப்போட்டியில் 8  விக்கெட் எடுத்த புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில், நாக்பூரில் வரும் 24ம் தேதி முதல் 28-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக போட்டியில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழ்நாடு அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் (சிறந்த பீல்டரும் கூட) புவனேஸ்வர் குமாருக்கு மாற்று வீரராக  இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

vijay shankar plays for SRH in IPL

வரும் வாரம் தன் திருமணம் காரணமாக புவனேஸ்வர் குமார் விடுப்பு கேட்டுள்ளார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார். இந்நிலையில் ஷிகர் தவான் இரண்டாவது போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார், அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை.

இந்திய ஏ அணி, மற்றும்  ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப் பட்டதாக தேர்வுக்குழு கூறியுள்ளது.

இந்திய டெஸ்ட் டீம்மில் இடம் பிடித்ததை பற்றி விஜய் சங்கர் கூறும்போது-

மிகவும் ஆனந்தமாக உள்ளது. இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எந்த லெவெலில் கிரிக்கெட் வீளையாடினாலும், அந்த போட்டியில் என் முழு பங்களிப்பையும் தருவேன். இந்தப்போட்டியில் நன்றாக விளையாடினால் அல்லது பெர்பார்ம் செய்தால் அடுதுக்கட்ட போட்டிகளில் இடம் கிடைக்கும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற  கனவு எனக்கும் இருந்தது. அது நிறைவேறி இருக்கிறது. முதல் முறையாக இந்திய அணியுடன் சேர்ந்து விளையாட போவதால் மிகுந்த  ஆவலுடன் இருக்கிறேன்.

சில முறை காயம் காரணமாக இந்தியா ஏ அணிக்கு விளையாட முடியாமல் போனதால் வருத்தம் அடைந்துள்ளேன். எனினும் இரண்டு மாதங்கள் கிரிக்கெட் அகாடமியில் நிறைய விஷயங்கள் உடல் பிட்னெஸ் பற்றி தெரிந்து கொண்டேன்.

முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்துள்ளேன். அதனால் எந்த வரிசையில் இறங்குகிறேன் என்பது பிரச்னையில்லை. எந்த இடத்தில இறங்கினாலும் என் முழு திறனை வெளிப்படுத்த முடியும் .என் பந்துவீசும் வேகத்தையும் அதிகப்படுதியுள்ளேன்.  இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி எனக்கு சிறந்த ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்’ என்றார்.

ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜயுடன் இவரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஹர்டிக் பாண்டியா போல் இவரும் இந்திய அணிக்கு சிறந்த ஆல் ரௌண்டராக வர வாய்ப்பு உள்ளதாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.