Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா ?

மக்கள் செல்வன்

விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன் என்பது விஜய் சேதுபதி சொல்லும் ஓபன் ஸ்டாட்ட்மென்ட்.

Vijay-Sethupathi-Seenu-Ramasamyசேதுவுக்கு மக்கள் செல்வன் என பெயர் கொடுத்ததும் இவரே. தற்பொழுது இருவரும் மாமனிதன் படத்தில் இணைந்து பணி புரிகின்றனர்.

கண்ணே கலைமானே

சீனு ராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , தமன்னா இணையும் படம். விவசாயியாக உதய், வாங்கி அதிகாரியாக தமன்னா நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

Kanne Kalimane

சமீபத்தில் சேது தான் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார் விஜய் சேதுபதி. தன் குருவுக்கு வாழ்த்துக்களையும் சொல்லியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல அனுபவத்தை தரும் எனவும் சொல்லியுள்ளார் அந்த பதிவில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top