Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டீஸர் வந்ததே எனக்கு தெரியாது- வருத்தத்தில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட விஜய் சேதுபதி பட இயக்குனர்

மக்கள் செல்வன்  விஜய்சேதுபதி  ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து ரோல்களையும் ஏற்று சிறப்பாக நடித்து, கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லனாக இவர் நடித்த தெலுங்கு படம் ஒருபுறம் ப்ளாக்பஸ்டர் ஹிட், மறுபுறம் ஹிந்தி வெப் சீரிஸுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என உள்ளது இவரது மார்க்கெட்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பட இயக்குனர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நிகழ்வு கோலிவுட்டில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்– விஜய் சேதுபதியின் 33 வது படம். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். நேற்று முன் தினம் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இயக்குனர் எனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்து விட்டது என்று அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.

yathum oore

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம். மன்னிக்கவும்… இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும்ஊரே யாவரும்கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.

திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.” என வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top