Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துக்கு வில்லனாக நடிக்க நூல் விடும் விஜய்சேதுபதி.. வலிமை படத்தில் இணைவாரா?
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் வலிமை படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
அதைப்போல் பெரிய நடிகர்களுக்கு தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அந்தவகையில் முதலிடத்தில் இருப்பது விக்ரம். அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது அந்த இடத்தை பிடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் நல்ல குணத்தால் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்சேதுபதி கலந்துகொண்ட விழாவில் ரசிகர்கள் தல அஜித்துடன் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு விஜய் சேதுபதி, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக இருப்பின் எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அப்போ வலிமைக்கு வில்லனாக புக் பண்ணிட வேண்டியது தானே..
