மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை வந்த விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் கணக்காளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். அங்கு நடிக்கும் நடிகர்களை அருகில் இருந்து பார்த்தவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் எழுந்தது. இதை தொடர்ந்து, அவருக்கு சில தொலைக்காட்சி தொடர் வாய்ப்புகளும் கிடைத்தது. பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல குறும்படங்களில் நடித்திருந்தார்.

அச்சமயத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், விஜய் சேதுபதிக்கும் நட்பு உருவாகியது. லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, புதுக்கோட்டை ஆகிய படங்களில் சிறு வேடங்கள் நடித்தவரை கார்த்திக் சுப்புராஜ் தான் தன் பீட்சா படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சசிகுமார் நடிப்பில் உருவாகிய சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படங்கள் விஜய் திரை வாழ்வில் பெரும் ஓபனிங்காக அமைந்தது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் இவருக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

அதிகம் படித்தவை:  இதற்காகத்தான் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜெர்ஸியை மாற்றிக் கொண்டேன்... மனம் திறக்கும் ராகுல்

கோலிவுட்டில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் ஒரே வருடத்தில் ரிலீஸுக்கு 6 படம், நடிப்பதில் 6 படம் என தொடர்ந்து மூன்று வருடங்களாக கில்லியாக ஓடிக்கொண்டு இருக்கிறார் தற்போதும் கூட, 96, ஜுங்கா, இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி ஆகிய படங்களை தன் வசம் வைத்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் மெகாஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இதில், யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தை ஏற்க இருக்கிறார். இது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு பக்கம் திரை வாழ்வு என்றாலும் தன் குடும்பத்தையும் சமமாகவே பார்த்து கொள்கிறார்.

அதிகம் படித்தவை:  சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் தமிழக வீரர் யார் அவர்?

விஜய் சேதுபதி தன் நீண்டநாள் காதலியான ஜெஸ்ஸி சேதுபதியை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சூர்யா, ஸ்ரீஜா என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் சூர்யா சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் விஜயின் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, தன் செல்ல மகன் மற்றும் மகளுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.