விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பதாக இருந்தார். அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழு.

படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் ‘பலே வெள்ளையத் தேவா’, ’பிருந்தாவனம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார். பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள ஊர்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தினர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில், அடுத்தபடியாக, கருப்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா நடிக்கிறார்.

இந்த படத்தில், விஜய் சேதுபதியை, தான்யா அறைவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. படப்பிடிப்பின்போது, விஜய் சேதுபதியை, நிஜமாகவே ஓங்கி அறைந்து விட்டார் தான்யா. ‘சின்னப் பொண்ணா இருக்கு; இந்த அடி அடிக்குதே…’ என, விஜய் சேதுபதி, படக்குழுவினரிடம் நகைச்சுவையாக கூறினார்.