Biggboss 8: இதோ அதோ என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 8 வந்தாச்சு. அட்டகாசமான ப்ரோமோ தற்போது வெளியான நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி நிகழ்ச்சியை ஆரம்பிக்க விஜய் டிவி தயார் நிலையில் இருக்கிறது.
இது குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்த ப்ரோமோவும் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு புதிதாக வரப்போகும் விஜய் சேதுபதி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? எந்த மாதிரியான சவால்களை அவர் எதிர்கொள்ள போகிறார்? என்பது பற்றி இங்கு அலசுவோம்.
மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சியின் நகர்வுகள் இருக்கும். அதனாலயே கடுமையான விமர்சனங்களும் வரும். இத்தனை வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் கூட அதை எதிர்கொண்டார்.
ஆனால் ஆறு வருடம் இல்லாத அளவுக்கு கடந்த சீசனில் அவர் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம் இதற்கு காரணம் அவருடைய ஒருதலைப் பட்சமான முடிவும் பாரபட்சமான பேச்சும் தான். அதிலும் தப்பு என்று வெளிப்படையாக தெரிந்தாலும் கூட அதை பேசியே சாமர்த்தியமாக மூடி மறைப்பதில் உலக நாயகன் வல்லவர் தான்.
விஜய் சேதுபதியின் பிக் பாஸ் யுக்தி
இதுவே அவர் மீதான கடும் விமர்சனங்களுக்கு காரணம். அதனால் கூட இந்த முறை அவர் விலகி இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதெல்லாம் போகட்டும் இப்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்குள் வருவதில் என்ன சவால்கள் இருக்கிறது என்பதை காணலாம்.
அந்த வகையில் விஜய் சேதுபதியின் அணுகுமுறையை கமலோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனாலயே அவர் பேசுவதில் ஆரம்பித்து போட்டியாளர்களை கண்டிப்பது நேர்மையான தீர்ப்பு என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மீது பாசிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்கள் வரலாம். அதை எதிர்கொள்வதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும். மேலும் மக்களுடன் இயல்பாக பழகுவது தான் விஜய் சேதுபதியின் சிறப்பு. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும்.
கமலை பொருத்தவரையில் மற்றவர் மனம் நோகாதபடி குறையை சுட்டிக் காட்டுவார். ஆனால் அது சரியில்லை என்பது மக்களின் கருத்தாக இருந்தது. அதனால் விஜய் சேதுபதி இந்த விஷயத்தில் புது மாதிரியான யுக்தியை தான் கையாள வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் ஆட்டம் எப்படி சூடு பிடிக்கிறது என்று.
பிக்பாஸ் சவால்களை எதிர்கொள்ளும் விஜய் சேதுபதி
- ரபிக்பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை ஜோடி, வேலையைக் காட்டும் விஜய் டிவி
- பிக்பாஸ் 8-க்கு வரப்போகும் பழைய போட்டியாளர்
- பிக்பாஸ் 8க்கு பெத்த கையை வளைத்த விஜய் டிவி