விஜய் சேதுபதி பல படங்களில் சிறிய ரோல்களில் எட்டி பார்த்தாலும், இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று தேசிய விருது வரை சென்றது. அதை தொடர்ந்து இன்று விஜய் சேதுபதியின் நிலை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் நடிப்பவர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி அரை டஜன் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.vijaysethupathi

இதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகைகள் பலரும் போட்டி போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ள ‘ஜுங்கா’திரைப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்து விட்டது.

படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சினிமாத்துறையினரின் மார்க்கெட் உச்சம் தொட்டுவிட்டால் போதும்… மற்றதெல்லாம் எச்சம்தான் என அவர்களது மண்டைக்குள் மணியடித்து விடும்.

பலகாலம் பழகிய நட்புகளே பதறுகிற அளவிற்கு நேரில் சென்றால் கூட ’யாருன்னே தெரியாத மாதிரி இறுமாப்பு’ கொண்டு தொடர்பு எல்லையை துண்டித்துக் கொள்வார்கள்.

ஆனால் அந்த அலட்டல் எல்லாம் விஜய் சேதுபதியிடம் துளியளவும் இல்லை. அதுவே அவருக்கு பெரும் சிரமம் ஆகிவருகிறது.VijaySethupathi-Said-Actress-Issue

‘என் படத்தில் ஒரே ஒரு கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுங்க’ என்று தினமும் யாராவது இருவர் விஜய் சேதுபதியின் இதயத்தை தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேறு வழியில்லாததால் அவரும் தலை யசைத்து கெஸ்ட் ரோலில் தலைகாட்ட சம்மதித்து விடுவதை வழக்கமாக்கி விட்டார்.

’இது வேண்டாம் சார்…’ என்று அவரை வைத்து முழு படம் எடுப்பவர்கள் கெஞ்ச ஆரம்பித்திருப்பதால், மனசை கல்லாக்க முடிவெடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.

சமீபத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடிக்க மறுத்த படங்கள் மட்டும் பத்துக்கும் மேல். வருத்தமாதான் இருக்கு… என்ன பண்ண? என்கிறார் விஜய்