வரிசையாக படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி. போதாக்குறைக்கு புதுப் படங்களையும் கமிட் செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியுடன் ஃபீல்டுக்கு வந்த சிவகார்த்திகேயனோ ஒரு நேரத்தில் ஒரு படம்தான் நடிக்கிறார்.

இது விஜய் சேதுபதிக்கு அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.

‘அவர் போற பாதைதான் கரெக்ட். ஒரு நேரத்துல ஒண்ணு ரெண்டு படங்கள்ல நடிச்சாதான் உங்க சம்பளமும் மார்க்கெட்டும் ஏறும். இப்படி வரிசையா நடிச்சா எப்பதான் நாம ரெண்டு இலக்கத்துல சம்பளம் பார்க்கிறது?’ என்று அட்வைஸ் பண்ணுகிறார்களாம். இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் ‘எனக்கு வளர்த்துவிட்டவங்க தான் முக்கியம் என்று சொல்லி தனது ஆரம்பகால இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் விஜய்சேதுபதி. ஒரு நல்ல நடிகர் மனசை கலைக்காதீங்கப்பா…!