Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தொடங்கும் தலைவன் இருக்கின்றான்.. கமலுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் ரோல் தெரியுமா?
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க இருந்த தலைவன் இருக்கின்றான் படம் ஆரம்பகட்ட வேலைகளிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு 20 வருடங்கள் கழித்து கமலஹாசனுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கமலஹாசன் தொடர்ந்து நடித்து வருவதால் இந்த படத்தை கிடப்பில் போட்டார். ஆனால் அரசியலில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு எடுத்துவிட்டார் கமலஹாசன்.
அதன் வெளிப்பாடுதான் தலைவன் இருக்கின்றான், இந்தியன்2 போன்ற படங்கள் தொடர்ந்து உருவாக உள்ளன. மேலும் தலைவன் இருக்கின்றான் படம் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த தலைப்பில் அப்போதே பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் தற்போது தலைவன் இருக்கின்றான் என பெயர் வைத்தால் அரசியலுக்கும் உதவும் என கணக்கு போட்டுள்ளார் கமலஹாசன். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
தேவர் மகன் படத்தில் வில்லனாக நடித்த நாசர் கடைசியில் இருப்பதைப் போல கதை எழுதப் பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக நாசரின் மகனாக கமலுக்கு கொடூர வில்லனாக நடிக்க உள்ளாராம்.
மேலும் நீண்ட நாட்கள் கழித்து வைகைப்புயல் வடிவேலு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். ஏகப்பட்ட சுவாரசியங்கள் இருப்பதால் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
