Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கில்மா படத்தில் முதல் முறையாக நடிக்கும் விஜய் சேதுபதி.. எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய படம்

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய் சேதுபதி. கைவசம் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் ஒரே நடிகரும் இவர் தான்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். பேன் இந்தியா ஹீரோவாக அனைத்து தகுதியும் உள்ளவராக வளர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் திடீரென விஜய் சேதுபதி கில்மா படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விட்டது. மேலும் விஜய் சேதுபதி இப்படிப்பட்ட படத்தில் நடிக்கிறாரா என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.

விஜய் சேதுபதி ஒன்றும் அடல்ட் படங்களில் நடிக்கவில்லை. இந்திய சினிமாவின் கில்மா ராணியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்று தமிழில் உருவாக உள்ளது. அதற்கு அவள் அப்படித்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும் பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் என்பவர் அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவள் அப்படித்தான் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இதற்காக அனுசுயாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. 2011 ஆம் ஆண்டு ஏற்கனவே இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு உருவானது குறிப்பிடத்தக்கது.

vijay-sethupathi-anushuya-cinemapettai

vijay-sethupathi-anusuya-cinemapettai

Continue Reading
To Top