Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு காலத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி.. இப்போ சன் டிவி சீரியலுக்கு வந்த சோகம்

vijay-sethupathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு காலத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி.. இப்போ சன் டிவி சீரியலுக்கு வந்த சோகம்

விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களின் படங்களில் முதன்மை நாயகியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபத்தில் சன் டிவி சீரியலில் தோன்றியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுக்குள்ள சீரியலுக்கு வந்துட்டாங்களா எனவும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என பெயர் எடுப்பது ரொம்பவும் கஷ்டம். ஆனால் அது இந்த நடிகைக்கு ஈஸியாக கிடைத்தது. இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதே சமயத்தில் அந்த நடிகை நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தினார். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த நந்திதா தான்.

தளபதி விஜய் நடித்த புலி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நந்திதா நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் தற்போது தமிழுக்கும் தெலுங்குக்கும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்.

இப்போது சோலோ ஹீரோயின் போன்ற படங்களில் நடித்து வந்தாலும் நந்திதாவுக்கு முன்னர் இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க போராடுவார் என்று பார்த்தால் திடீரென சன் டிவி சீரியலுக்கு வந்து விட்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலில் கெஸ்ட் ரோலில் தோன்றியுள்ளார் நந்திதா ஸ்வேதா. அதை ப்ரோமோவில் போட, ரசிகர்களும் பாவம் எப்படி இருந்த பொண்ணு இப்போ இப்படி ஆக்கிட்டாங்களே என வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

nandita-swetha-cinemapettai

nandita-swetha-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top