‘தெறி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி – ‘தளபதி’ விஜய்யின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார்.

விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 நாயகிகளாம். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரமாம்.

mersal

மேலும், சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன், கோவை சரளா ஆகியோர் முக்கய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

vijay sethupathy

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.

அதிகம் படித்தவை:  விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.!

தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘AP இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் – ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தேனாண்டாள் நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

சமீபத்தில், இந்நிறுவனங்கள் (API & ஹோம் ஸ்க்ரீன்) விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் காம்போவில் தயாராகி வரும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வெளிநாட்டு ரைட்ஸை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  தன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தானே கலாய்த்த சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர். செம்ம சார் நீங்க ?
vikram vedha teaser
vijaysethupathy

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிக்கா, ரமேஷ் திலக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடிக்கின்றார். இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டங்களையே கதையாக உருவாக்குகின்றனர்.

 

‘மெர்சல்’-ஐ விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.