fbpx
Connect with us

Cinemapettai

எப்படியாவது ஹிட் கொடுங்க.. பிரபல இயக்குனரிடம் சரணடைந்த விஜய் சேதுபதி.. ஏரி உடஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எப்படியாவது ஹிட் கொடுங்க.. பிரபல இயக்குனரிடம் சரணடைந்த விஜய் சேதுபதி.. ஏரி உடஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்

ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக கலக்கி வருபவர் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவர வரிசை கட்டி நிற்கின்றது. மாமனிதன், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, க/பெ ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள்.

இது ஒரு புறமிருக்க அடுத்தபடியாக ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ இயக்குனர் சசிவுடன் இணையப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செல்லமே, ரோஜா கூட்டம்,பிச்சைக்காரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சசி.

வில்லன் கதாபாத்திரத்திற்கு மட்டும் கிட்டதட்ட 10 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது, மீண்டும் கதாநாயகனாக உருவெடுத்தால் 12 முதல் 15 கோடி வரை சம்பளம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பீதியில் உள்ளனர். யாராக இருந்தாலும் மார்க்கெட் உள்ளபோது பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டியது தானே. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு பேர் போனவர் என்றே கூறலாம்.

ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றியை பெறவில்லை. மாறாக மினிமம் கேரண்டி நடிகர் என்ற தகுதியை இழந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதனால் அடுத்தடுத்த அவர் நடிக்கும் படங்கள் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியா இருக்குமா அல்லது தொடக்கமா இருக்குமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

Continue Reading
To Top