Tamil Cinema News | சினிமா செய்திகள்
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்..
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் கதாபாத்திர தேர்வு மூலமும், நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த நடிப்பு ராட்சசன் விஜய் சேதுபதி படம் என்றாலே பல்வேறு தரப்பு ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெறும். கலவையான கதாபாத்திரத் தேர்வு, வெரைட்டியான நடிப்பு என ரசிகனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உன்னத நடிகன் விஜய் சேதுபதி, அடுத்ததாக பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநர் அருண் குமாருடன் கைகோர்க்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஷெட்யூலை தென்காசியில் திட்டமிட்டுள்ள படக்குழு, அதன்பிறகு மலேசியா பறக்க இருக்கிறது. மலேசியா ஷெட்யூலை 35 நாட்கள் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை எஸ்.என்.ராஜராஜாவின் கே புரடக்ஷன்ஸ் மற்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். புரடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் படத்துக்குப் பின்னர் அடுத்த படமாக ஜூங்கா, 96, செக்கச்சிவந்த வானம் மற்றும் தெலுங்கில் அறிமுகமாகும் சிரஞ்சீவியின் சே ரா நரசிம்ம ரெட்டி படத்தின் ரிலீஸுக்காக விஜய் சேதுபதி காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, இம்மாத இறுதிக்குள் தனது போர்ஷனை முடித்துக் கொடுத்து விடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
