விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் ஜூங்கா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி டான் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் இதில் வெளி நாட்டில் வாழும் ஸ்டைல் டான் கேரக்டர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற உள்ளது. என கூறப்பட்டது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இவர் இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  வசூலில் விஜய்சேதுபதி படைத்த முதல் சாதனை.!!!கிளப்பில் விஜய் சேதுபதி.
priya

செய்தி வாசிப்பாளராக துவங்கி, சின்னத்திரையில் அழுத்தமான முத்திரை பதித்து, மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெகுஜன ஊடகங்களில் பேசுபொருளாக உருவாகியுள்ள அழகுத் தேவதை ‘பிரியாபவானி சங்கர்’, நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தபடத்தில் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  மேற்கு தொடர்ச்சி மலையின் மேக்கிங் வீடியோ.!
priya

விஜய் சேதுபதி அடுக்கடுக்காகப் படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே, இவரை வைத்து இதற்காகத்தானே ஆசைப்பட்டாய பாலகுமாரவை இயக்கி, தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த இயக்குனர் கோகுல் மறுபடியும் ‘ஜூங்கா’ எனும் காமெடிப்படத்தை இயக்குகிறார்.

அந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேயாதமான் பிரியா பவானி சங்கர் நடிக்கப் போகிறாராம். முன்னதாக எமிஜாக்சன் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.