இணையதளத்தில் தீயாய் பரவும்.! புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதியின் மகன் போட்டோ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

இணையதளத்தில் தீயாய் பரவும்.! புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதியின் மகன் போட்டோ!

News | செய்திகள்

இணையதளத்தில் தீயாய் பரவும்.! புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதியின் மகன் போட்டோ!

நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் எஅசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது பல படங்கள் கைவசம் உள்ள நிலையில், பிஸியாகவே வலம் வருகிறார். கடந்த ஆண்டிலும் அதிக படங்கள் நடித்த முன்னணி நடிகராக விஜய் சேதுபதியே இருப்பார் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.

vijaysethupathy

விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ‘ஜூங்கா’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயீஷா நடித்து வருகிறார்.

இப்படத்தின் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், பெண் வேடமிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

actor

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்தார்  விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளித்தார்.

மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

vijaysethupathy

ஜூங்கா படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் மகனும் இந்தப் படத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் என்பதால் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top