நடிகர் விஜய் சேதுபதி நல்ல படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்,விஜய் சேதுபதி படம் என்றால் திரையரங்கிற்கு நம்பி போகலாம்,மேலும் விஜய் சேதுபதி கையில் அரை டஜன் படங்கள் இருக்கின்றன.

vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி இப்போழுது நடித்து வரும் படம்  சூப்பர் டீலக்ஸ்,இந்த படத்தை இயக்கி வருபவர் ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அவர்கள்,மேலும் இந்த படத்தில் ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோருடன் பல பிரபலமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

Vijay-sethupathi

இந்த படத்திற்கு முதலில் டைட்டில் என்ன இருந்தது தெரியுமா.?இந்த படத்தின் டைட்டில் முதலில் அநீதி கதைகள் என்று தான் பெயர் வைத்திருந்தார்கள் ஆனால் இப்பொழுது சூப்பர் டீலக்ஸ் என்று தலைப்பை மாற்றிவிட்டார்கள். தலைப்பு மற்றும் தான் மாற்றினார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் ஏன் என்றால் நடிகர் விஜய் சேதுபதியே மாறி தான் உள்ளார்.

vijay-sethupathy

ஆமாம் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஷில்பா என்ற பெண் வேடத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்  பெண் வேடத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று காட்டு தீயாய் பரவி வருகிறது இணையதளத்தில். இது நம்ம விஜய் சேதுபதியா என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்  இந்த புகைப்படத்தை படக்குழுவே வெளியிட்டு, இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என தெரிவித்துள்ளார்.