பார்ப்பவரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் நியூ லுக்கில் விஜய் சேதுபதி…!!!(புகைப்படம் உள்ளே)

‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள்.

இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை , ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

இதனையறிந்ததும் இயக்குநர் கோகுலைத் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி கேட்ட போது,‘ இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்.

நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன்.

கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும்.

அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம்.அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி ஜுங்கா படத்துக்காக நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஜுங்கா என்கிற படத்தை இயக்குகிறார்.

இதில், லண்டனில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கிறார். வெளிநாட்டிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் என்பதால், விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகரும், அரசியல்வாதியுமான அருண் பாண்டியன்.

இந்நிலையில், ஜுங்கா படத்துக்காக நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களை கலக்குகிறது.

Comments

comments

More Cinema News: