ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார்.

அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்vijaysethupathi

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. ஆனால், திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து இவர் மிக விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியது இல்லையாம்.ஆனால், நீண்ட நாட்களாக ஒரு காரை வாங்கவேண்டும் என்று விஜய் சேதுபதி விரும்பியுள்ளார்.vijaysethupathy

சமீபத்தில் அந்த ஆசையும் நிறைவேறியுள்ளது, ஆம், விஜய் சேதுபதி BMW 7 series வெள்ளை நிற காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.