Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமந்தா, நயன்தாரா ரெண்டு பேரையும் அலேக்கா தூக்கிய விஜய் சேதுபதி.. ரெண்டு லட்டு திங்க ஆசையா
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் ஆகியோர் கூட்டணியில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒப்பந்தமாகி உள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
விக்னேஷ் சிவன் கடைசியாக நானும் ரவுடிதான் படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் தயாரித்திருந்த நானும் ரவுடிதான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரியும் பயங்கரமாக பேசப்பட்டது.

samantha
மீண்டும் இவர்கள் இணைவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் ஆக விஜய் சேதுபதி நயன்தாராவுடன் சமந்தா சேர்ந்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வரும் சமந்தா இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இப்போது இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளன.

kaathuvakkula-rendu-kadhal
கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா
