Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி.. அழுத்தமான ரோலில் அசத்தல்
நடிகர் விஜய்சேதுபதி பெரிய ஹீரோ என்ற பந்தா இல்லாமல் கௌரவ தோற்றங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் புதிதாக அவர் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி இருக்கிறது. கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டார் . பில்கேட்சிடம் பேசி விட்டாயா? என்று ஒருவர் கேட்க நான் பேசி விட்டேன்.
அவர்தான் என்னுடன் பேசவில்லை என்ற நக்கலான வசனத்தோடு டிரெய்லரில் அறிமுகமாகும் விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. குரங்குக்கு வாழைப்பழம் கொடுத்து அவர் பேசும் வசனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாகவே கூறப்பட்ட நிலையில் டிரெய்லரில் முதியவர் ஒருவரையே கதை நாயகனாக காட்டி இருக்கிறார்கள்.
