தற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் ஜூங்கா.

படத்தின் கதை பிடித்து போகவே நடிப்பதும் மட்டும் இன்றி இப்படத்தையும் தானே தயாரித்து வெளியிட போகிறார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவரும் அதிக பட்ஜெட் படம் இது தான். இப்படத்தின் பிரதான ஷூட்டிங் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்தது. இது ஒரு  காமெடி கலந்த ஆக்ஷன் படம் .

junga

இதில், ஸ்டைலிஷ் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கிறார். வெளிநாட்டிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார்.முக்கியக் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.