Connect with us

Cinemapettai

கவண் படத்தில் நடிக்க இருந்தது இந்த பெரிய ஹீரோவா? ஆனா சுத்தமா செட்டாகாது என விட்டு விட்டார்களாம்

kavan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவண் படத்தில் நடிக்க இருந்தது இந்த பெரிய ஹீரோவா? ஆனா சுத்தமா செட்டாகாது என விட்டு விட்டார்களாம்

தமிழ்சினிமாவில் கேமராமேன்கள் பலரும் இயக்குனராக தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் கேவி ஆனந்த்.

சூர்யாவுக்கு அயன், ஜீவாவுக்கு கோ, விஜய் சேதுபதிக்கு கவன், தனுசுக்கு அனேகன் என கேவி ஆனந்த் இயக்கிய ஒவ்வொரு படங்களும் பல நடிகர்களின் வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.

இந்நிலையில் கேவி ஆனந்த் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கவண் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ விஜய்தான் எனக்கூறியது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற படம்தான் கவண். கவண் படத்தின் கதையை முதன் முதலில் விஜய்யிடம் கூறுமாறு படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கதை விஜய்க்கு சுத்தமாக செட் ஆகாது என தெரிந்து அதனை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதாக கேவி ஆனந்த் பேட்டி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கதைக்கு எது தேவை என்பதை விட எது தேவை இல்லை என்பதில் நான் தெளிவாக இருப்பதாகவும் பளிச்சென்று கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top