fbpx
Connect with us

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் வித்தியாசமான பஸ்ட் லூக் போஸ்டர்.. காட்டுத்தீ போல் வைரல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் வித்தியாசமான பஸ்ட் லூக் போஸ்டர்.. காட்டுத்தீ போல் வைரல்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வரவேற்ப்பை பெருமளவு பெற்ற நடிகர் விஜய் சேதுபதி.

சமீபகாலமாக ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களும் வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் செவன்ஸ் க்ரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிக்கும் துக்ளக் தர்பார் எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தனது இணைய தள பக்கங்களில் வெளியிட்டது.

மேலும் துக்ளக் தர்பார் படத்தின் டிவி உரிமத்தையும் சன் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tughlaq-Durbar

Tughlaq-Durbar

Continue Reading
To Top